ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ஒரு இந்திய இராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். நவ்ஷெரா செக்டாரில் லாம் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹவல்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பின்னர், அவருக்கு தொடந்து சிகிக்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார் […]
மூன்று வயது சிறுமி இரண்டு மைனர் சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன்பின்னர் இருவருக்கும் எதிராக ஐபிசி பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். “இரண்டு மைனர் சிறுவர்களால் தனது மூன்று வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாய் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை […]
அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட்டில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் இன்னும் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், படிப்படியாக நகரத்தில் ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் தீ […]
பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து […]
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி […]
சாத் பூஜையின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்றைய சப்ததி தினத்தில் பக்தர்கள் சூரிய உதய நேரமான காலை 6:48 மணிக்கு முன் சூரிய கடவுளை வழிபாடு செய்து,பின் உணவை உண்டு நோன்பை முடிப்பார்கள். நாடு முழுவதும் சாத் பூஜையை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள் .நான்கு நாள் நடைபெறும் இந்த சாத் பூஜை திருவிழாவை குறிப்பாக பீகார் , ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள்.சூரிய கடவுளுக்காக செய்யப்படும் இந்த பூஜையில் அவரது துணைவியார் உஷா […]
மத்திய பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வாயில் களிமண்ணால் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விடிஷா எனும் மாவட்டத்தில் போபாலுக்கு கிழக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்70 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாயில் களிமண் அடைக்கப்பட்ட நிலையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவர் மகன் கூறுகையில் அவரது அம்மா காய்கறி பயிர் வைத்துள்ளதாகவும், அதை கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்திலுள்ள […]
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்து கொண்டு செல்கின்றது என்று கூறினாலும், இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் மொத்தமாக 9,050,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,32,764 பேர் உயிரிழந்துள்ளனர், 84,75,897 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் என்றே கூறலாம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா […]
பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் கர்நாடகாவில் நிறைவேறும் என்று பாஜக தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான முன்னாள் கர்நாடக அமைச்சர் ட்விட்டரில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாட்டு வதைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். இதனை தொடர்ந்து, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி, “எதிர்காலத்தில் கர்நாடகாவில் பசு படுகொலை தடை ஒரு யதார்த்தமாக இருக்கும்.” இது குறித்து, கால்நடை […]
மவுத்வாஷ் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று இந்திய நிபுணர்கள் இல்லையென்று நம்புகிறார்கள். எளிதாக கிடைக்கும் மவுத்வாஷ்கள் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்று கூறும் ஆய்வுகள் குறித்து இந்தியாவில் சுகாதார வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். அதாவது, மருத்துவ அமைப்புகளில் இதனை நிரூபித்தால் மக்கள் கொரோனா வைரஸை தடுக்க மவுத்வாஷ் உபயோகிக்கக்கூடாதா..? என்று கேள்வி எழுப்புகின்றனர். எந்தவொரு ஆய்வும் இறுதி முடிவை உறுதிப்படுத்தும் வரை குறிப்பிடப்படக்கூடாது. ஆராய்ச்சியாளர்கள் இறுதி அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை முடிவுகளை உறுதிப்படுத்த முடியாது […]
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு விதிக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று முதல் இந்தூர், போபால், குவாலியர், விடிஷா, மற்றும் ரத்லம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார். இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விதிக்கப்படும் என்றும் […]
நேற்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவி விலகியதைத் தொடர்ந்து பீகார் கட்டிட கட்டுமான அமைச்சர் அசோக் சவுத்ரிக்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பரிந்துரையின் பேரில் அசோக் சவுத்ரியை கல்வி அமைச்சராக பீகார் ஆளுநர் பாகு சவுகான் நியமித்தார். பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் புதிய பதவிக்காலத்தின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 16 ம் தேதி 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் ஒருவர் தான் […]
கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றுள்ளார். உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து இந்த சோதனை நடத்தபட்டு வருகிறது.அதன்படி, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், தன்னார்வலர்களுடன் கோவாக்சின் 3 […]
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அடுத்த வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுவாசிப்பதில் பிரச்சினை தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சோனியா காந்தி வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று கோவா செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் சோனியா […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பூட்டான் நாட்டில் காணொளி மூலம் தனது எதிரணியான லோடே ஷெரிங் உடன் அறிமுகப்படுத்தினார். கார்டை அறிமுகப்படுத்திய பின்பு, பிரதமர் மோடி பூட்டான் நேஷனல் வங்கி வழங்கிய ரூபே அட்டைகளை ஏடிஎம்களில் ரூ .1 லட்சத்திற்கும் ரூ .20 லட்சத்திற்கும் பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களில் பயன்படுத்தலாம் என்று கூறினார். இந்த நிகழ்வை தொடங்கியா பின் உறையற்றிய மோடி, “இது இந்தியாவில் பூட்டானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா, […]
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, பிப்ரவரி-க்குள் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்திற்குள் பொது மக்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அவர் கூறினார். இந்த தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ரூ .1,000 விலை இருக்கும் […]
பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூ-டியூப் சேனல் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி கனடா செல்ல அக்ஷய் குமார் உதவியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த நான்கு மாதங்களில், சுஷாந்தின் போலி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுவதன் […]
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பானது பாமரமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான பரிசோதனை […]
உத்தரபிரதேச பாலியல் வன்கொடுமை வழக்கை பொக்ஸோ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்களை விற்றதாகவும் கைது செய்யப்பட்ட நீர்ப்பாசனத் துறை ஜூனியர் இன்ஜினியர் ராம் பவன் சிங்கைக் காவலில் வைக்கக் கோரி மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மனுவை விசாரணைக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்ஸோ) நீதிமன்றம் நெற்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் நீதிபதி ரிஸ்வான் அகமது நவம்பர் 24 ஆம் தேதி நிர்ணயித்தார். மேலும், […]