பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்..இந்திய இராணுவ வீரர் வீரமரணம்.!

An Indian Army soldier has been martyred by Pakistani forces in the state of Jammu and Kashmir.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ஒரு இந்திய இராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். நவ்ஷெரா செக்டாரில் லாம் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹவல்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பின்னர், அவருக்கு தொடந்து சிகிக்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. இரு தரப்பினருக்கும் இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சிறிது நேரம் நடைபெற்றது.