இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டாலும், கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 90,04,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,32,202 பேர் உயிரிழந்துள்ளனர், 84,27,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 46,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 584 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,45,107 பேர் சிகிச்சை பெற்று […]
ஆட்டை திருடுவதற்காக 12 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சூர் எனுமிடத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறுவனை சிலர் பின் தொடர்ந்து அவனது ஆடுகளில் ஒன்றை பிடிக்க முயன்றனர். இதனால் அந்த சிறுவன் கோபமுற்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ள்ளான். எனவே அவர்கள் அந்த […]
மும்பையின், மேற்கு பாந்த்ராவில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் உரிமையாளரிடம் சிவசேனா மூத்த தலைவர் நிதின் நந்த்கோக்கரால் பேசும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், கடையின் பெயரில் உள்ள ‘கராச்சி’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மராத்தி மொழியில் நல்ல பெயராக மாற்றுங்கள் “நீங்கள் அதை செய்ய வேண்டும், நாங்கள் உங்களுக்கு நேரம் தருகிறோம் எனக் கடைக்காரரை மிரட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவி […]
மும்பையில் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது . தீபாவளிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை நோய் தெற்றானது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு பரவும் அபாயம் உள்ளது .எனவே அதற்கேற்ப தான் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்படும் . குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தால் அதற்கேற்ப புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடுகள் […]
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியின் தந்தையான பிரபு தயால் இன்று தனது 95 வயதில் காலமானார். அவர் தனது குடும்பத்தினருடன் டெல்லியின் ராகப்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 70 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தின் கியாராஸ்பூர் காவல் நிலையத்தின் கீழ் ஒல்லிஜா பகுதியில் உள்ள புறநகரில் வசித்து வரும் 70 வயதான பெண் ஒருவரின் சடலம் ஒரு வயலின் புதர்களில் இருந்து நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது . உடனடியாக அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , விசாரணை மேற்கொண்டனர் .இறந்த பெண்ணின் உடலை அடையாளம் கண்ட அவரது குடும்ப […]
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அதற்கு மறுப்பு தெரிவித்தால் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டி 2 ஆண்கள் தப்பி ஓட்டம். உத்தராகண்டில் இரண்டு ஆண்கள் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்திருக்கிறது. பாகேஸ்வர் மாவட்டம் கல்ப்ளிகேர் தெஹ்ஸில் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் […]
எதிர்ப்பையும் மீறி இறுதி ஆண்டு தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இது குறித்து, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று கூறியதாவது, எதிர்ப்பை மீறி, இறுதி ஆண்டு கல்லூரி தேர்வுகள் நாட்டில் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடத்தப்பட்டது. காணொளி மூலம் ஒரு நிகழ்வில் பேசிய அவர், தொற்றுநோய்களின் மத்தியில் ஆன்லைன் தளங்களுக்கு மாறிய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில், இறுதி ஆண்டு […]
புதிதாக நியமிக்கப்பட்ட பீகாரின் கல்வி அமைச்சர் மேவாலால் சவுதிரி ராஜினாமா. பீகார் கல்வி அமைச்சராக பதவியேற்ற மேவாலால் சவுதிரி 3 நாட்களுக்குப் பிறகு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், தனது பதவியை இன்று மேவா லால் சவுத்ரி ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய மேவா லால், “ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க யாரும் இல்லை” என்று கூறினார். […]
சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, எந்த மாநிலத்திலும் குற்றங்கள் குறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். அதேவேளையில் மாநில அரசுக்கு, இந்த அதிகாரத்தை வாபஸ் பெறுவதற்குஉரிமை உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்க்கு, மாநில அரசு ஒப்புதல் பெறாமலேயே எந்த மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்னவென்றால்,டெல்லி சிறப்பு காவல் […]
டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ .2,000 அபராதம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக அபராதத்தை ரூ .500 முதல் ரூ .2,000 வரை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார். முககவசம் தவறாமல் அணிவதால் கொரோனா பரவுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என்று கூறினார். இந்நிலையில், “பொது இடத்தில் முககவச அணியாத அனைவருக்கும் ரூ .2000 அபராதம் விதிக்கப்படும்” […]
ஹரியானாவில் தொடங்கும் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்கிறார். கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி தயாரித்து வரும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை ஹரியானாவில் நாளை தொடங்குகிறது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக அனில் விஜ் பங்கேற்க முன்வந்துள்ளார். நாட்டின் 22 தளங்களில் 26,000 தன்னார்வலர்களுடன் கோவாக்சின் […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். டெல்லியில் இருந்து ராம்நாத் ஆந்திராவிற்கு சிறப்பு விமானம் மூலம் நவம்பர் 24 ஆம் தேதி வருகிறார். அவர் காலை 10.45 மணியளவில் ரெனிகுண்டா விமான நிலையத்திற்கு வருவார். பின்னர் அவர் சாலை வழியாக ராம்நாத் கோவிந்த் திருமலையை பகல் 11.40 மணியளவில் செல்கிறார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து மதியம் 12.40 மணியளவில் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். பின்னர், பிற்பகல் […]
“டிஜிட்டல் இந்தியா ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது” பெங்களூரு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு 2020 ஐ இன்று காணொளி மூலம் திறந்து வைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பணி இனி ஒரு வழக்கமான அரசாங்க முன்முயற்சியாக பார்க்கப்படுவதில்லை, அது ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என தனது உரையை தொடங்கினார். மேலும், டிஜிட்டல் இந்தியாவுக்கு நன்றி, நமது நாடு வளர்ச்சிக்கு […]
தெலுங்கானாவில் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் ஒரே இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம்,மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகபுரம் கிராமத்தில் மின்சார துணை மின் நிலையத்தின் பின்னால் உள்ள புதர் ஒன்றில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது . கடுமையான துர்நாற்றத்திற்து பிறகு சடலங்களை கண்ட கிராமவாசிகள் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க , விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த […]
ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய வங்கி ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது .இதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி , நிதித்துறையில் புதுமைகளை மேம்படுத்தவும் ,புதுமையை வளர்க்கும் சூழலையும் உருவாக்க உள்ளதாக தெரிவித்தது . இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் புதுமை மையத்தின்(innovation hub) தலைவராக கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் .இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை […]
ஆந்திராவில், 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து மாநிலங்களிலும், அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. இவர்கள் அதிகமாகி தனியார் பள்ளிகளின் தான் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுண்டு. இந்நிலையில், ஆந்திராவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய […]
நேதாஜி பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125வது பிறந்த நாள் வருகிற ஜனவரி 23ஆம் […]
ஜம்மு- ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது . ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டாவின் நான் பகுதியில் உள்ள பான்டோல் பிளாசா அருகே இன்று அதிகாலை 5 மணி முதல் பாதுகாப்பு படையினருக்கும் , பயங்கரவாதகிளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . பான்டோல் பிளாசா அருகே உள்ள ஒரு வாகனத்தில் ஒளிந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் […]
இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை. இந்தியாவின் இரும்பு பெண்மணியும், முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி, இன்று தனது 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் […]