டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ .2,000 அபராதம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக அபராதத்தை ரூ .500 முதல் ரூ .2,000 வரை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார். முககவசம் தவறாமல் அணிவதால் கொரோனா பரவுவதை கணிசமாகக் குறைக்க முடியும் என்று கூறினார்.
இந்நிலையில், “பொது இடத்தில் முககவச அணியாத அனைவருக்கும் ரூ .2000 அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளன என்றும் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு உறுதியளித்தார்.