ம.பி-யில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 70வயது பெண் .!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 70 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 70 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தின் கியாராஸ்பூர் காவல் நிலையத்தின் கீழ் ஒல்லிஜா பகுதியில் உள்ள புறநகரில் வசித்து வரும் 70 வயதான பெண் ஒருவரின் சடலம் ஒரு வயலின் புதர்களில் இருந்து நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது .

உடனடியாக அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , விசாரணை மேற்கொண்டனர் .இறந்த பெண்ணின் உடலை அடையாளம் கண்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ,விவசாயத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த சில தினங்களாக அவர் தான் தண்ணீர் பாய்ச்சும் போது தனது பயிர்களை பாதுகாக்க வயலுக்கு சென்று வருவதாக கூறினார் .

போலீசாரின் கூற்றுப்படி ,வயலுக்கு சென்ற பெண்ணின் வாயில் மண்ணை அடைத்து விட்டு ,அவரது தனிப்பட்ட பகுதியில் குச்சியை சொருகி கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் . அதனையடுத்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவித்த அதிகாரி ஒருவர், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய்ப்பட்டு குற்றவாளியை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் . கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் , அப்பகுதி மக்கள் விசாரணையை விரைவுபடுத்துமாறு போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்.