கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 587 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தாலும், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 8,958,143 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 131,618 பேர் உயிரிழந்துள்ளனர். 8,381,770 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,439 பேர் புதிதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், […]
டெல்லியில் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக வரவழைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தால் அடுத்த சில நாட்களில் 663 ஐசியு படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று கூறினார். மேலும், கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன. இருந்தாலும் தற்போது போதுமான படுக்கைகள் […]
கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்கு விசாரணை செய்ய மதுரா நீதிமன்றம் ஒத்திவைக்கிறது. கிருஷ்ணா ஜன்மபூமியை ஒட்டியுள்ள மசூதியை அகற்றக் கோரும் மனுவை அக்டோபர் 16 ம் தேதி மதுரா நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதற்கான விசாரணை நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், கிருஷ்ணா ஜன்மபூமி நிலத்தின் மொத்த 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமையை கோரி உத்தரபிரதேச மதுரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு […]
கோவாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுலா சின்ஹா தனது 77 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மூத்த பாஜக தலைவர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, “திருமதி. மிருதுலா சின்ஹா ஜி பொது சேவையை நோக்கிய முயற்சிகளுக்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான எழுத்தாளராகவும் இருந்தார், இலக்கிய உலகிற்கும், கலாச்சாரத்திற்கும் விரிவான […]
கோவாவின் முன்னாள் கவர்னர் மிருதுலா சின்ஹா காலமானார். கோவாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுலா சின்ஹா தனது 77 வயதில் இன்று காலமானார். அவர் தனது 78 வது பிறந்தநாள் வர இன்னும் சில நாட்களுக்கு முன்பு காலமானார். 1942 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பீகாரில் உள்ள சாப்ரா கிராமத்தில் பிறந்தார். சின்ஹா கோவாவின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார். சின்ஹா புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், பாஜக மஹிலா மோர்ச்சாவின் […]
வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை குஜராத்தின், வடோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,விபத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடோதராவில் […]
இந்த ஆண்டு “சாண்ட் கி ஆங்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனிக்கு ஒரு ஆண் குழந்தையைப் பிறந்தது. தனது குழந்தைக்குத் தேவையில்லாத அதிகப்படியான பாலை என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது தனக்கு மிகவும் வேடிக்கையான யோசனைகள் வழங்கப்பட்டதாக ஹிரானந்தனி கூறினார். பின்னர், அவரது மகளிர் மருத்துவ நிபுணர் மும்பையில் மருத்துவமனையை பரிந்துரைத்தார், அதில் தாய்ப்பால் வங்கி இருந்தது. ஆனால் அவர் தனது பாலை வங்கிக்கு நன்கொடையாக வழங்கு தயராக இருந்த […]
போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது. கொரானா அதிகரித்து இருப்பதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால் தான் என ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட கூடிய செயல் என அனைவராலும் கூறப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் மூலமாக பரவக்கூடிய போலி செய்திகளை கையாள்வதற்கு ஒரு ஒழுங்குமுறையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட […]
லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை என வாங்கி நிர்வாகி கூறியுள்ளார். தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 90 வருடங்களுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது. ஆனால், இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில், வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, […]
குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை நரபலி கொடுத்து கொடூரமாக கொன்ற நிகழ்வு உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மிகப் உயர்ந்த வளர்ச்சியை எட்டிய நிலையிலும், மூடநம்பிக்கையால் பலர் நரபலி கொடுக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர் . அந்த மூடநம்பிக்கையால் பலியான சிறுமி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தின் கான்பூரில்தான் நிகழ்ந்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் கட்டம்பூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தீபாவளி தினத்தன்று […]
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜீவ் சக்சேனா , சுஷேன் மோகன் குப்தா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி மற்றும் அவரது மகன் பாகுல் நாத் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பல்வேறு தரப்பினருக்கு சுமார் 300 கோடி ரூபாய் […]
கள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 13 ஆம் தேதி, 6 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிழந்தனர் மற்றும் பலர் இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் இந்த கள்ள சாராயம் விற்ற வழக்கில் சிக்கிய துணை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து திடீர் நடவடிக்கை எடுத்தார் யோகி ஆதித்யநாத்.
மத்திய அரசின் சட்டங்களை எதிர்க்கும் அதிகாரம் ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டம் குறித்த அரசியலமைப்புக்கு சவால் விடக்கூடிய ஒரு எழுத்து பூர்வமான மனுவை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டுமென ஹெர்ஷல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார். இந்நிலையில் இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் என்ன வகையான மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் எனவும், மும்பையின் உயர்நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லையா..? […]
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியினை (எல்விபி) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் , சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 90 வருடங்களுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது.ஆனால் இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் […]
இனி உங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்லலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைமுக நகரமான கொச்சி முழுவதிலும் மெட்ரோ ரயில் சேவைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சியில் அதிக அளவில் சைக்கிளில் பலர் பயணிப்பதை கண்டு தற்பொழுது மெட்ரோவில் தங்களது சைக்கிள்களை பயணிகள் இலவசமாக கொண்டுவரலாம் என கொச்சி மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இன்றிலிருந்து சங்கம் பூஜா பூங்கா, டவுன்ஹால், எர்ணாகுளம் தெற்கு, பலாரவத்தம், மகாராஜா கல்லூரி […]
ஒடிசாவில் சட்டவிரோதமாக தனது பணம் மற்றும் அரிசியை எடுப்பதால், 10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவிலும் பரவ ஆரம்பித்ததால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டதால் சத்துணவை நம்பி இருக்கக்கூடிய மாணவர்கள் உணவிற்கு அல்லல்படுவதை அறிந்த இந்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றாலும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை குறைத்து கொண்டேதான் செல்கிறது. மற்ற நாடுகளை கணக்கிடுகையில் முன்பெல்லாம், இந்தியா தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் புதிய தொற்றில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்பொழுது மிகக் குறைவான அளவிலேயே புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இருப்பினும் இதுவரை இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
ஐ.ஆர்.சி.டி.சி இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளை ரத்து செய்கிறது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு இருப்பதால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், “கொரோனா தொற்றுநோய் அச்சம் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இரன்டு தேஜாஸ் ரயில்கள் ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் […]
பிரதமர் நரேந்திர மோடி 2020 பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை நாளை மதியம் 12 மணிக்கு காணொளி மூலம் துவக்கி வைக்கிறார். பெங்களூரில் தொழில்நுட்ப மாநாடு 2020 நவம்பர் 19 முதல் தொடங்கி 21 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மற்றும் கர்நாடக புதுமை மற்றும் தொழில்நுட்ப சங்கம், கர்நாடக அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் ஸ்டார்ட்அப், மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) மற்றும் எம்.எம் ஆக்டிவ் சயின்-டெக் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க […]
குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க இந்தியாவை உலகமே எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. அதேபோலவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்க, ரஷ்யா, சீனா, உட்பட பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளதால், […]