கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 587 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தாலும், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 8,958,143 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 131,618 பேர் உயிரிழந்துள்ளனர். 8,381,770 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,439 பேர் புதிதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 587 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 4,44,755 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு இந்தியாவில் குறைவான தாக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு மக்களுக்காக அறிவிக்கும் தளர்வுகளை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி சமூக இடைவெளிகளை பின்பற்றினால் நிச்சயம் முழுவதுமாக இந்த நிலை மாறி இந்தியா சுகாதாரமான நாடக உருப்பெறும்.