கோவா முன்னாள் ஆளுநர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

கோவாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுலா சின்ஹா தனது 77 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

கோவாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுலா சின்ஹா தனது 77 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மூத்த பாஜக தலைவர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, “திருமதி. மிருதுலா சின்ஹா ஜி பொது சேவையை நோக்கிய முயற்சிகளுக்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான எழுத்தாளராகவும் இருந்தார், இலக்கிய உலகிற்கும், கலாச்சாரத்திற்கும் விரிவான பங்களிப்புகளை வழங்கினார்.

அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி, “என்று பிரதமர்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

unknown node