இந்தியாவின் இரும்பு பெண்மணியின் 103-வது பிறந்தநாள்! ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை.

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை.

இந்தியாவின் இரும்பு பெண்மணியும், முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி, இன்று தனது 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.