பண்டோரா ஆவணம் : வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

Sachin Tendulkar has been included in the list of more than 300 Indians who have amassed wealth abroad, according to the Pandora Papers.

பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார்.

உலக அளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் பண்டோரா பபர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த ஆவணத்தில் உள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி வழங்கும் 14 நிறுவனங்களிலிருந்து கசிந்துள்ள 11.9 மில்லியன் ஆவணங்களை வைத்து 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும், இதில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் முதலீடு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்த பட்டியலில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.