ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி ஒருவர் பலி..!

ஹைதராபாத்தில் ஜில்லேலாகுடா பகுதியை சார்ந்த செக்காலா ஆனந்த் (54)இவர் வேலையை முடித்து விட்டு தினமும் லோக்கல் ரயிலில் தனது வீட்டிற்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று இரவும் லோக்கல் ரயிலில் பயணம் செய்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது செக்காலா ஆனந்த்விற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
அப்போது ரயிலில் இருந்த சக பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதை தொடந்து ரயில் மாலாக்பெட் நிலையத்தை வந்து அடைந்ததும் தயாராக ஆம்புலன்ஸ் இருந்தது.
பின்னர் உடனடியாக செக்காலா ஆனந்த்தை சக பயணிகள் தூக்கி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாமல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 15 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு கதவு திறந்தனர்.
ஆனால் கதவு திறப்பதற்கு முன்பாகவே செக்காலா ஆனந்த் உயிர் பிரிந்தது.இதனை தொடந்து அங்கு வந்த ஆனந்த் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் ஆனந்த் இறந்து விட்டார் என கூறினார்.
செக்காலா ஆனந்த் உயிரை காப்பாற்றும் என ஆம்புலன்ஸ் வரவைத்தனர். ஆனால் கடைசியில் ஆனந்த் உயிரை ஆம்புலன்ஸ் பறித்து விட்டது என பலர் கூறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025