#Be Alert: மக்களே இதில் கடன் வாங்க வேண்டாம் – ஆர்.பி.ஐ எச்சரிக்கை..!

The Reserve Bank of India has said that people should avoid taking loans from unauthorized online credit services.

அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க கூடாது.

அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் சேவைகளில் கடன் பெறுவது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் பலர் கடன் வாங்கி பாதிப்புக்குள்ளாகி வருவதால் இதையடுத்து ஆர்பிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

சமீபத்தில் மதுராந்தகம் அடுத்த விவேக் என்ற இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஆன்லைன் பைனான்ஸ் நிறுவனத்தில் 4 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் கடனை வட்டியுடன் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஆன்லைன் பைனான்ஸ் நிறுவனத்தினர், விவேக் பற்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவதூறு தகவலை அனுப்பியுள்ளனர். இதனால், விவேக் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.