கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் 3 வது ஊரடங்கு நேற்று முடிவடையும் தருவாயில் மேலும் 2 நாள் அதாவது மே 19 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. தற்போது, கர்நாடகாவில் பஸ் மற்றும் ரயில் சேவைக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் போக்குவரத்தை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சலூன் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் கொரோனாவால் 1147 பேர் பாதிக்கப்பட்டு, 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…