பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதேபோல், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, கிரிராஜ்சிங், அனுராக் தாக்குர், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-ம் கட்ட தேர்தலுக்காக 2 கூட்டங்களில் பேசினார். இதேபோல், தேஜஸ்வி யாதவ், கடந்த 28-ந் தேதியில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி வந்தார். இவர்களது இந்த தீவிர பிரச்சாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ந் தேதி சனிக்கிழமை நடக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 10-ந்தேதி செவ்வாய் கிழமை நடக்கிறது.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…