பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் இன்று கூறியுள்ளது.
இந்நிலையில், DRDO பாட்னாவிலும், முசாபர்பூரிலும் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா Makeshift மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிதவித்துள்ளது.
பாட்னாவின் பிஹ்தாவில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்று திறக்கப்படும் என்றும், முசாபர்பூரில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அடுத்த ட்வீட்டுகளில் பி.எம்.ஓ தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனைகளில் 125 ஐ.சி.யூ படுக்கைகள் வென்டிலேட்டர்கள் மற்றும் 375 சாதாரண படுக்கைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்ஸிஜன் சப்ளை உள்ளது. மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கு செல்லும் பீகார், அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஆகஸ்ட் -11 ம் தேதி நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், பீகார் உட்பட 10 மாநிலங்கள் நாட்டின் மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்றுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…