Categories: இந்தியா

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்தினார். அதில் பேசுகையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம். சுதந்திர இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு அரசுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி வழங்கியுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல.  கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தை வளப்படுத்தியதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் உரையாற்றி கொண்டு இருக்கும் போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்கின்றனர். எங்கள் வெற்றியை இருட்டடிப்பு செய்ய எதிர்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை தலைவர் ஜன்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்பிகளை அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிபிட்டார். இருந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர் அமளிக்கு மத்தியிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். அதில், இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது பதிலுரையில் குறிப்பிட்டார். பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

6 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

8 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

9 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

11 hours ago