போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் இந்தியா வருகை.! மூன்றாவது முறையாக சந்திப்பு.!

- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது.
- 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார் போர்ச்சுகல் நாட்டின் பிரதமர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குடியரசு தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று போர்ச்சுகல்லின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆண்டோனியோ காஸ்ட மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பில் கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதன் பின் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையில் நடைபெறும் 3 வது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் போச்சுகல் இடையே உள்ள வர்த்தகம், ராணுவ பாதுகாப்பு, அறிவியல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025