ஆசிய சாம்பியன்ஸ்.. மகத்தான பெருமை.! இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!

Indian Hockey Team - PM Modi

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி  4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

4வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரர்களுக்கு கோப்பை வழங்கி 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு தொகையையும் அறிவித்தார் .

ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியை பிரதமர் மோடியும் வாழ்த்தியுள்ளார். அவர் X சமூகவலைத்தளத்தில் பதிவிடுகையில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்.

இது இந்தியாவின் 4வது வெற்றியாகும், இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரன செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமையை பற்றவைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். என ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்