மே 28-ல் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!

Prime Minister Modi

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடம், இந்தியாவின் உணர்வை அடையாளப்படுத்தும் என, லோக்சபா செயலகம் நம்புகிறது. இந்த திட்டம் ரூ.862 கோடிக்கு ஏலம் விடப்பட்டாலும், தற்போது செலவு ரூ.1,200 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

முன்னதாக, மோடி அரசின் ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இந்த புதிய கட்டிடத்தை திறப்பதற்காக பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மே 26, 2014 அன்று பதவியேற்றார். ஆனால், இந்த புதிய பார்லிமென்ட் கட்டடத்தை மே 28ல் திறந்து வைக்கிறார் பிரதமர்.

சிறப்பம்சம்:

டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட இந்த புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக காட்சியளிக்கிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, நூலகம், பல குழு அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்