கோவையில் 13 வயது சிறுமி மாயம்.! 6 தனிப்படைகள் மூலம் உடனடியாக மீட்ட போலீசார்.!

கோவையில் 13 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானதை தொடர்ந்து, காவல் துறையினர் 6 தனிப்படைகள் மூலம் நேற்று மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் , நேற்று முன் தினம் பகல் 12 மணி அளவில் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
சிறுமி காணாமல் போன புகாரின் பெயரின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதனை தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.