ரயில் இஞ்சின் தொழிற்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.!

குஜராத் மாநிலம் தாஹோத்தில் கட்டமைக்கப்பட்ட ரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

PM Modi In Gujarat

குஜராத் : 2 நாள் அரசு முறைப் பயணமாக குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். ஆபரேசன் சிந்தூரின் வெற்றியைத் தொடர்ந்து முதல்முறையாக குஜராத் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்.

அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளில் குஜராத்தின் தாஹோத்தில் கட்டமைக்கபட்ட ரயில் எஞ்சின்கள் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், தாஹோடிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், நாட்டின் முதலாவது 9000 எச்.பி.(HP) திறன் கொண்ட ரயில் என்ஜினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் சென்றனர்.

இதில் உற்பத்தி செய்யப்படும் லோகோமோட்டிவ் என்ஜின்கள் 4,600 டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் சுமார் 1,200 என்ஜின்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தி அமைப்பு ஆண்டுக்கு 120 ரயில் என்ஜின்களை உற்பத்தி செய்ய முடியும், சந்தை தேவைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 150 ரயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இதைத் தொடர்ந்து, பூஜ் நகருக்குச் சென்று பிரதமர் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டங்களில் ரயில் திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்கள் அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்