கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் – ராகுல்காந்தி ட்வீட்.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமான விபத்து குறித்து, பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகட்டுவம், காயமடைந்தவர்கள் விரைவாக மீட்க பிரார்த்தனை செய்வதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…