இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை’ பயணம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 57வது நாளாக இன்று தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் அவருடன் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, சங்காராரெட்டி மாவட்டத்தில் பட்டஞ்சேறில் கொண்டாடப்படும் பொனாலு பண்டிகையில் கலந்து கொண்டார்.
அப்போது, ராகுல் காந்தி பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார். இதன்பின்னர் அங்கு திருவிழாவில் பங்கேற்று ராகுல்காந்தி பழங்குடியினர் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டு நடனம் ஆடியவர் வைத்திருந்த சாட்டையினை வாங்கி, தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டு கோஷமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown node