ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் என்னும் மாவட்டத்தில் உள்ள சிப்பாபரோட் நகரில் வசித்து வரக்கூடிய 26 வயது பெண் ஒருவர் தனது 3 வயது மகனை அடித்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காயத்ரி ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் மீது அவரது கணவர் அணில் ஜாதவ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி திங்கள் கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மகன் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவர் தனது மகனை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடித்ததாகவும் அப்பெண்ணின் கணவர் போலீசில் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் மயங்கிய நிலையில் இருந்த மகனைக் கண்டதும் பதறிப்போன தந்தை, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அங்கு சென்றதும் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அருகில் இருந்தவர்கள் அந்த பெண் தனது மகனை அடிப்பதை தடுக்க முயன்றாலும் அவள் கதவைத் திறக்காமல் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயத்ரி ஜாதவ எனும் பெண் மீது இந்திய தண்டனை சட்டம் 302 கீழ் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பெண்மணி இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…