மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களின் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். இந்த செய்தி இருநாட்டினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது முப்படைகளும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் ரோந்து செல்லும் போது வீரர்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவித்தியுள்ளாராம்.
இதுபோக கடலோர பாதுகாப்பு மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகளையும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 24ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் வெற்றி கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் அவர் நடத்திய முப்படை தளபதியுடன் நடத்திய இந்த ஆலோசனை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…