சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர்,உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் வெற்றி பெற்று பிஜேபி ஆட்சி அமைத்துள்ளது.அதைபோல பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.
இதனிடையே,ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.மேலும்,கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால், இந்த அனைத்து இடங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் அறிவித்திருந்தது.
அசாம் – பாஜக:
இந்த நிலையில்,ராஜ்யசபா தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறது.குறிப்பாக,அசாம் மாநிலத்திலுள்ள காலியாகும் இரண்டு இடங்களையும் பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.அதன்படி பாஜக பபித்ரா மார்கெரிட்டாவையும்,கூட்டணிக் கட்சியான யுபிபிஎல் யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி – லிபரல் ருங்வ்ரா நர்சரியையும் நிறுத்தியுள்ளது.
அசாமில் மொத்தம் உள்ள 126 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை பிடிக்க 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.இதன்காரணமாக,அந்த மாநிலத்தில் இரண்டு இடங்களையும் பாஜகதான் வெல்லும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியுள்ளார்.ஆனால்,44 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.
கேரளா:
கேரளா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 3 இடங்களுக்கு,ஆளும் எல்டிஎஃப் 2 இடங்களும்,காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
நாகலாந்து – முதல் பெண் வேட்பாளர்:
நாகலாந்து மாநிலத்தில் காலியாக உள்ள இடத்திற்கு அம்மாநில பாஜக மகளிர் பிரிவு தலைவியான கோன்யாக் மட்டுமே வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நாகலாந்து மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகும் முதல் பெண் வேட்பாளர் இவர்தான்.எனவே,நாகலாந்தில் காலியாகவுள்ள ஒரு இடத்தை பாஜக கைப்பற்றும் என கூறப்படுகிறது.
திரிபுரா – பாஜக வசம்:
திரிபுரா மாநிலத்தில் காலியாகும் ஒரு ராஜ்யசபா இடத்திற்கு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.எனினும்,60 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக வசம் 40 இடங்கள் உள்ளதால்,இந்த இடத்தையும் பாஜகவே கைப்பற்றும் என்று கருத்தப்படுகிறது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் பலம்:
பஞ்சாப் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி,தற்போது காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கு 5 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.அவர்கள் அனைவரும் தற்போது போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.இதனால் மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 10 ஆக அதிகரித்துள்ளது.ஆனால்,மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் தற்போது பாஜகவிற்கு 97 எம்பிக்கள் உள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம்:
68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டசபையில் 43 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.இந்த நிலையில், பாஜகவின் ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக (HPU) துணைவேந்தர் பேராசிரியர் சிக்கந்தர் குமார் அர்விக்கப்பட்ட நிலையில்,அவருக்கு எதிராக எந்த வேட்பாளரையும் நிறுத்தாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…