ஜார்க்கண்ட் மாநிலம் கிருதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் முழங்கால் மற்றும் கைகளில் எலி கடித்துள்ள சம்பவம் அரங்கேறி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மே இரண்டாம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால், அருகிலுள்ள தான்பாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் மம்தா தேவி கூறுகையில், கிருதி அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல வார்டில் குழந்தை வைக்கப்பட்டிருந்ததாகவும், தன் குழந்தையை பார்க்க சென்ற போது குழந்தையின் முழங்கால்கள் மற்றும் கைகளில் எலி கடித்ததால் ஆழமான காயங்கள் இருப்பதை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்ததாகவும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் குழந்தைகள் நல வார்டில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதுடன், அந்நேரம் பணியிலிருந்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…