மேற்கு வங்கம்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. நாளை (ஜூன் 4) மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வந்தது. இருந்தும் சில இடங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை முன்னதே மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பராசத் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேகங்கா சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களிலும், மதுராபூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் காக்டிவிப் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில வாக்கு சாவடிகளிலும் ஜூன் 1இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது.
இந்த மறுவாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையால் நின்று வாக்களித்து வருகின்றனர். வழக்கம் போல மாலை 6 மணி வரை இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…