ரூ.20,000 கோடி நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர் – மத்திய அமைச்சர்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு சிறு தொழில்களுக்கான சலுகைகள் கிடைக்கும் என்றும் ரூ.250 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கும் சிறு தொழில்களுக்கும் சலுகைகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். ரூ.20,000 கோடி நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர். சிறு, குறு தொழில்துறைக்கு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…