#பரபரப்பு: டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.!

Tractor rally in Delhi today, on the occasion of Republic Day, farmers, police fired tear gas, there is tension in the region.

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர்.

டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.

டெல்லி எல்லை சிங்குவில் 50,000க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளது. டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் தொடங்கிய பேரணி டெல்லிக்குள் நுழைகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

அனுமதித்த நேரத்திற்கு முன்பே சிங்கு எல்லை நோக்கி பேரணி தொடங்கியதால் காவல்துறை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளது. மதியம் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் பேரணி தொடங்கியதால் போலீசார் தடியடியும் நடத்தியுள்ளனர்.