சரத்பாவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு! பரபரக்கும் மஹாராஷ்டிரா அரசியல் களம்!

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களாகியும் தற்போது வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாநில அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால், யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியவில்லை.
அதிக தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு முதலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த அழைப்பை பாஜக தலைமை ஏற்கவில்லை.
தற்போது சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பாவரை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். இதன் மூலம் இவர்கள் கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025