பாலியல் விவகாரம்: வீராங்கனைகளின் போராட்டம்…வலுக்கும் பிரபலங்களின் ஆதரவு.!!

Wrestlers Protest

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

பாலியல் விவகாரம்

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்  எழுந்த நிலையில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சானியா மிர்சா ஆதரவு 

இந்நிலையில், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து பல பிரபலங்கள் ஆதரவையும், கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ” ஒரு விளையாட்டு வீரராகவும், பெண்ணாகவும் இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது. இவர்கள் எல்லோரும் நம் நாட்டுக்காக பெருமையை கொண்டு வந்த வீரர்கள். அவர்களின் வெற்றியை நாமும் கொண்டாடியிருக்கிறோம் அதனால், இக்கடினமான நேரத்திலும் அவர்களுடன் இருப்போம். விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இர்பான் பதான்

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது ட்வீட்டர் பக்கத்தில் “இந்திய வீராங்கனைகள் பதக்கம் பெறுவது மட்டும் அல்ல, எப்போதும் நம் பெருமைக்குரியவர்கள்” என பதிவிட்டுள்ளார்.


ஹர்பஜன் சிங் 

முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் “சாக்ஷி, வினேஷ் இந்தியாவின் பெருமை. ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில், தெருவில் இறங்கி போராடி வரும் நம் தேசத்தின் பெருமையை கண்டு வேதனை அடைகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

வீரேந்திர சேவாக்

கிரிக்கெட் வீரர் சேவாக் டிவிட்டரில் “நாட்டிற்கு பெருமை சேர்த்த, கொடியை ஏற்றி, நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்த நமது சாம்பியன்கள், இன்று சாலைக்கு வரவேண்டியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது மிகவும் உணர்திறன் வாய்ந்த விஷயம், இது பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். வீரர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் பேரில் இன்றே வழக்குப்பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்