ட்விட்டர் அலுவலகத்தை மூடுவோம்… இந்திய அரசு கொடுத்த அழுத்தம்… முன்னாள் ட்விட்டர் சிஇஓ.!

இந்தியாவில் ட்விட்டர் இயங்குதளத்தை மூடுவது தொடர்பாக அச்சுறுத்தல்கள் வந்தன முன்னாள் ட்விட்டர் சிஇஓ குற்றச்சாட்டு.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி, இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, டோர்சியிடம் வெளிநாட்டு அரசு கொடுத்த அழுத்தங்களுக்கு சில உதாரணம் கூறுமாறு கேட்கப்பட்டது.
அப்போது பேசிய டோர்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை பிளாக் செய்வதற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. மேலும் இந்த விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள், அவர்கள் சொல்வதை செய்யாவிட்டால் உங்கள் நிறுவன ஊழியர்களின் வீட்டில் சோதனை செய்வது, நாட்டில் ட்விட்டர் அலுவலகத்தி மூடுவது போன்ற அச்சுறுத்தல்கள் வந்தன என்று கூறினார்.
இவையனைத்தும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலிருந்து வந்த அழுத்தங்கள் என்று தெரிவித்தார். டோர்சியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.