சிக்கலில் சிக்கியுள்ள சிக்கீம் முதல்வர்! 6 வருட தடை என்னவானது?!

Published by
மணிகண்டன்

சிக்கிம் மாநிலத்தில் அண்மையில் சில மாதங்களுக்கு முன் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த பொதுத்தேர்தலில் இதற்கு முன்னர் முதல்வராக இருந்த பிரேம் சிங் என்பவரின் கட்சி அபார வெற்றி பெற்றது. அதனால் பிரேம் சிங்கை முதல்வராக அக்கட்சி அறிவித்தது. ஆனால் அவர் முதலமைச்சராக நீட்டிக்க ஒரு சிக்கல் இருந்து வந்தது.

அதாவது அவர் 1990 காலகட்டங்களில் சிக்கிம் மாநில கால்நடை துறை அமைச்சராக இருந்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஊழல் புகாரின் காரணமாக அவர் மீது 2003இல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையானது 2017 ஆம் ஆண்டு முடிவடைந்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அவர் 2018 ஆகஸ்ட் வரை  ஓராண்டு சிறையில் இருந்தார்.

ஓராண்டு சிறையில் இருந்த காரணத்தால் அவருக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது அவர் கட்சி அதிக இடங்களை பெற்றுள்ளதால்,

அவரை முதல்வராக அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். இதனால் அவர் இன்னும் ஆறு மாதத்திற்குள் சிக்கிம் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பிரேம் சிங் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தான் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஒரு தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே, தாங்கள் விதிக்கப்பட்ட தடையை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு சம்மதம் தெரிவித்து 6 ஆண்டுகள் தடையை 13 மாதங்கள் ஆக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே, அவர் விரைவில் சிக்கிம் மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து முதல்வராக தொடர்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

3 minutes ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

8 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

3 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago