இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த சோம்நாத்!

இஸ்ரோவின் புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் தலைவராக இதுவரை செயல்பட்டு வந்த கே.சிவன் அவர்களின் பதவி காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து கேரளாவை சேர்ந்த எஸ்.சோம்நாத் அவர்கள் இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் சென்டரில் இயக்குனராக இருந்து வருவதாகவும், கொல்லத்தில் உள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த மூன்று ஆண்டு காலத்துக்கு இஸ்ரோவின் தலைவராக சோம்நாத் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா திட்டம், சந்திராயன்-3, மங்கள்யான் -2 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025