தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 23 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு ....!

In Tamil Nadu, more than 23,000 people have been affected by corona infection in a single day.

தமிழகத்தில் ஒரே நாளில் 23,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையிலிருந்து 9,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8,963 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.