ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..! கர்நாடக துணை முதல்வர்

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
ரயில்வே வாரியத்தின் தலைவர், கட்டாக் மருத்துவமனையிலும், பாலசோர் மருத்துவமனையில், காயமடைந்த பயணிகளின் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
அவர், ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்