இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அன்புள்ள பிரதமர், மாலை 6 மணிக்கு சீனர்களை இந்திய எல்லையிலிருந்து வெளியேற்றும் தேதியை மக்களிடம் சொல்லுங்கள், நன்றி என பதிவிட்டுள்ளார்.
unknown node