லாட்டரி சீட்டு அதிர்ஷ்டத்தால் கேரளாவில் கோடீஸ்வரர் ஆன கோவில் அர்ச்சகர்!

லாட்டரி சீட்டுகளுக்கு தடையற்ற மாநிலமாக விளங்கும் கேரள மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்.
கேரளா மாநிலம் தளிபரப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிதன். கோவில் அர்ச்சரகரான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு வாங்கிய லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் இவருக்கு காய் கூடியுள்ளது. அப்போது , கேரளா லாட்டரியின் முதல் பரிசான 40 லட்சமும் , 50 சவரன் நகையும் பெற்று லட்சாதிபதியாக உயர்ந்தார்.
பணம் அதிகளவு இருந்தாலும் தொடர்ந்து கோவில் அர்ச்சரகராக இருந்து வந்தார். லாட்டரி சீட்டும் விடாமல் வாங்கி வந்து இருக்கிறார்.இந்நிலையில், கேரளாவில் மழை கால லாட்டரி குலுக்கலில் அஜதன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை பரிசுத்தொகையாக 5 கோடி ரூபாயை வென்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் கோடிஸ்வரக்களில் ஒருவராக அஜிதன் முன்னேறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025