கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.
மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்!
அதன்படி, 127 நாள்களுக்கு பிறகு சற்று நேரத்திற்கு முன் ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளிக்கு அருகே வெற்றிகரமாக அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில் “எல்1 புள்ளியை ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக சென்று அடைந்து மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது.
விஞ்ஞானிகளின் இடைவிடாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும். அசாதாரணமான சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம்” என பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…