அவதூறு வழக்கு : ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!

அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மோடி எனும் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏ புருனேஷ் மோடி என்பவரால் அவதூறு வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற விதிப்படி இரண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தால் அவரது எம்பி பதவி பறிக்கப்படும். அதன்படி கேரள மாநில வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.
2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து எதிர்த்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத், அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை செய்திருந்தார் ராகுல்காந்தி. ஆனால் அங்கும் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சரிதான் எனவும் உத்தரவிடப்பட்டு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது ராகுல் காந்தி இறுதி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.அங்கு மேல்முறையியீடு செய்துள்ளார். இதனிடையே சூரத் நீதிமன்றத்துக்கு வழக்கு தொடர்ந்திருந்த பாஜக எம்என்று புருனேஷ் மோடி உச்சநீதிமன்றத்திலும் கேவியேட் மனுவை தாக்கல் செய்து உள்ளார்.
ராகுல் காந்தியின் மீதான மேல்முறையீட்டு மனுவானது இன்று பிஆர் கவாய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.