ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் சில பகுதிகளில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த லேசான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். அதிகாலை 4.09 மணி முதல் 4.25 மணிக்கு இடைப்பட்ட கால அவகாசத்தில் 4.4, 3.1, 3.4 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டது.
