சுற்றலா வந்தவர்கள் சுவாமி தரிசனத்தை முடித்து திரும்பும்போது தீப்பற்றி எறிந்த பேருந்து.!

Default Image
  • மும்பையிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு பேருந்தில் சுற்றுலா சென்று, சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர்.
  • ஆந்திர மாநிலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, குறுக்கே மற்றொரு பேருந்து வந்ததால் எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்தில் சுற்றுலா சென்றனர். பின்னர் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர். நேற்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அடுத்த நெலிவாடா சந்திப்பு அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, குறுக்கே மற்றொரு பேருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவரை தாண்டி, எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தைவிட்டு கீழே இறங்கினர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் காயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்