கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது ; ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அண்மையில் தான் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் பரவிக் கொண்டே செல்கிறது.
தினசரி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகமாக உள்ளது. எனவே, அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் கூறுகையில், கேரளாவில் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025