ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் அஸ்தி இன்று மதியம் கங்கையில் கரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நல்லடக்கம் நேற்று மாலை 5 மணி அளவில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அஸ்தி ஹரித்வாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.