மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிக்கிறது… புகழ்ந்த பிரதமர் மோடி.!

PM Modi DisasterTeam

விபத்து நடந்த இடத்தில் துரிதமாக செயல்பட்ட மீட்புப்பணியினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவம் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து நாட்டு மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் நேற்று முதல் மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

மீட்புக்குழுவினரின் பணிகள் மற்றும் நாட்டிற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிப்பதாக இருக்கிறது.

இரயில்வே துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்(NDRF), ஒடிசா பேரிடர் மீட்புக்குழுவினர்(ODRAF), உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமை என அவர் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்