PM Modi - Mansoon Session [File Image ]
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் பற்றிய விவரம் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரனகணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தையே முடக்கியுள்ளது. கடந்த 20ஆம் தேதி துவங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் விவரம் தெடர்பாக பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அதன் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்பதே எதிர்க்கட்சியினர் நோக்கம் என கூறப்படுகிறது. மேலும், கடந்த 2 தினங்கள் எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி தலைவர்கள் மணிப்பூர் சென்று இருந்தனர். அங்கு மக்களின் கள நிலவரம் பற்றி அறிந்து கொண்டனர். இது பற்றியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…