“9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்… இன்னும் 2 மாசம் தானே” – விஷால் கலகல பதில்.!

நடிகர் சங்க கட்டட திறப்பு மற்றும் திருமணம் எப்போது என்ற கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.

actor Vishal

சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, ‘ரெட் பிளவர்’ திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்ட போது, நடிகர் விஷாலிடம் நடிகர் சங்க கட்டடம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” 9 வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டதாகவும் இன்னும் 2 மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பிறந்தநாளான ஆக. 29-ம் தேதி நல்ல செய்தி வரும் எனவும் கூறியுள்ளார். சொன்னபடி தனது திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இனி படம் ரிலீஸாகும் முதல் 3 நாட்கள், அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவ்யூ பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கேட்டு கொண்டார்.

நடிகர் விஷால் நடிகை சாய் தன்சிகாவை காதலிக்கிறார். இது தொடர்பாக அண்மையில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இருவரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்