வரலாற்றிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது – அதானி புகழாரம்!

Businessman Adani praised the federal government for presenting the best budget of the century.

நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டம் என்றும் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார், அரசு கூட்டுப் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் கூறிருந்தார். தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து தொழிலதிபர் கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்சார்பு இந்தியா மீதான நம்பிக்கையை தற்போதையை பட்ஜெட் உறுதிப்படுத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், இது குறுகிய கால உத்வேகத்திற்கும், நீண்டகால பார்வைக்கும் சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node