கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை தடுக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தேசிய அளவிலான பிரச்சனைகள் ஏற்படும்போது அதை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாளுகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆக்சிஜன் பிரச்சனை என்பது நாடு சார்ந்த பிரச்சனை என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார். ராணுவத்தின் வசம் உள்ள மருத்துவ வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…